உன் அன்பின்
அளவை பிரிவின்
இறுதி அணைப்பிலே
உணர்ந்தேன்

பிறரால் பாதிக்க பட்டவர்களை
விட பிடித்தவர்களால்
பாதிக்கப்படுபவரே அதிகம்

உயிராக இருப்பவர்களிடம்
உரிமையாக
இருப்பதை காட்டிலும்
உண்மையாக
இருப்பது தான் முக்கியம்

யாரும் அழைத்தால்
மட்டுமே கேட்கும்
என் இதயம்
அவளை மட்டும்
நினைத்தாலே ஒளிர்கிறது
இனிய காதலர் தின வாழ்த்துகள்

பிரிந்தாலும்
என் அன்பு
ஒரு போதும்
பொய் இல்லையே

உன் வரவின்
தாமதத்தை
நகர்த்தி கொண்டிருக்கிறேன்
ஏதோவொரு தேடுதலில்
உனில் தொலைந்தே

மாலை நேர வானம் சாய்ந்தபோது
காதல் நிறம் மனதில்
பரவி ஆனந்தம் தருகிறது

நீ அருகில் இருந்தால்
என் இதயம் எழுதும்
கவிதைக்கு முடிவு இல்லை

என்னவனின்
குறுஞ்செய்தியை
பார்த்தால் போதும்
பிரிவையும் சுகமாய்
கடத்திவிடுவேன்

மாட்டிய கொலுசில்
மனசையும் கோர்த்து
விட்டாயா
ஒலிக்குமிசையில்
உன்பெயர் கேட்குதே