கண்ணாடியில்
ஒரு பெண்
தன்னை ரசித்து கொள்ளும்
அழகை விட
காதலோடு தனக்கு
பிடித்தமான ஒருவர்
அவளை ரசித்து சொல்லும்
அழகு பேரழகு
கண்களில் தெரிந்த அந்த ஒளி
ஆயுள் முழுக்க பேசி விடும் மொழி
விடிந்த பின்னும்
கலையாத
கனவு நீ
கண்களிலிருந்து
ஆழம் விழுதை போல்
வேர் பிடித்து
பனை மரம் போல்
பெருக வேண்டும்
நம் காதல்
உனக்கும்
தான் எத்தனை
சுயநலம்
என்னை மறந்து
உனையே
நினைக்க வைத்து
விட்டாயே நினைவாகி
சிலரின் பெயர் கூட
மனதை சிரிக்க வைக்கும்
மென்மையான சத்தம்
இயந்திரமாய்
சுழலும் வாழ்க்கையில்
என் இதயமும்
சில எதிர்பார்புகளோடு
வாழ்ந்துக்கொண்டு
இருக்கென்றால்
அது நீகாட்டும்
அன்பினால் மட்டுமே
தோஷங்கள்
இல்லாத போதும்
பரிகாரங்கள் செய்கிறேன்
நம் காதலின்
சந்தோஷத்திற்காக
நம்பிக்கை இல்லாத காதல்
காற்றில் பறக்கும்
ஒரு காகிதம் போல
வாடிய மலரைப்போல்
உயிறற்று கிடக்குறது
வாசிக்க நீயின்றி வரிகள்...
💖 பக்கம் 236 / 478
📋 Copied