உனது வருகையே
நிர்ணயிக்கும்
எனக்கான
மணித்துளிகள்
உறைவதையும்
உருகுவதையும்
உறங்காத கண்களையும்
தழுவி கொண்டது
உறக்கம்
உன்னன்பின் தாலாட்டில்
இதயம் காயப்படுத்தும்
மனிதரையும் காதல் மன்னிக்கும்
மனதை
நெகிழ வைத்த காதல்
எவராலும் மீண்டும்
உருவாக்க முடியாத
ஒரு மாயம்
பிரம்மித்து போகிறேன்
உன் மௌனத்திலும்
இத்தனை காதலா என்று
நாற்றோடு
கதை பேசும்
காற்றாய் மனதை
உரசுகிறாய்
நீ காதல்
மொழி பேசி
நாட்கள் மாறலாம்
மாதங்கள் மாறலாம்
வருடங்கள் மாறலாம்
உன்னென் தோற்றங்களும்
மாறலாம் மாறாதே
என்றும் நானுன்
மீது கொண்ட காதல்
என் காதல் கணவா
உனை தேடி
மனம் தொலையவே
ஊடலை தருகிறாயா
கண்கள் பேசும்
காதல் மொழி
வார்த்தைகளுக்கு
அப்பாற்பட்டது
தடைகளை தாண்டி வரும்
ஒரே பாவனையான ஆசை
தேடாமல் வருகிற காதல்
💖 பக்கம் 202 / 478
📋 Copied