விடியலின் முதல் ஒளி
அவளின் முகத்தில் தான் பிறக்கிறது
விடியலின் முதல் ஒளி
அவளின் முகத்தில் தான் பிறக்கிறது
காதல் மொழி பேசாமல்
கண்களின் ரகசியம்
சொல்லிக் கொண்டே இருக்கிறது
என்னோடு நீ
கூட இருக்கும்
நேரம் தான்
என் வாழ்வின்
வசந்த காலங்கள்
எனக்காக காத்திருக்கிறாய்
என்ற நினைப்பே
உன்மீதான காதலை
இன்னும்
அதீத வலிமையாக்குது
நொடி பார்க்காமல் இருந்தாலே
மனது குழம்பும்
அது காதலின் முழுமையான ஆரம்பம்
உடலுக்கு உயிர்கூட சுமைதான்
நாம் உயிராக நினைக்கும்
ஓர் உயிர் நம்மை
மறந்து போகும் போது
நிறை குடமும்
தளும்புது
கண்கள் உனை காண
மனமும் தள்ளாட காதலில்
உன்
நினைவில்
என் நொடிகளும்
கரைந்துக் கொண்டிருக்கு...
முகம் தொடாமல்
புன்னகையை வருடும் பார்வை
இதயத்தில் காற்றாய் ஓடும்
உதடுகளின் அருகே
வார்த்தைகள் முடங்கி விடும்
காதல் மட்டும் பேசும்