மௌனத்தின் நடுவே
அவளின் பெயர்
நெஞ்சில் ஒலிக்கிறது
காரணம் கேட்காமலேயே
கண்ணீரின் வலியை
உணர்ந்து கொள்ளும்
துணை கிடைப்பது
வரம்
முகம் பார்த்த நொடி
உயிர் முழுவதும்
புதைந்து விட்டது
சேரவும் முடியாது
பிரியவும் முடியாது
ஆனால் ஒன்றாகவே பயணிப்பது
தண்டவாளங்கள் மட்டுமல்ல
சிலரின் காதலும் தான்
என்றோ உனக்காக
கிறுக்கியவை
இன்று படித்தாலும்
எனக்கே நாணத்தை
தருகிறது
அதீத காதலில்
இத்தனை பைத்தியக்கார
தனங்களா
என்று உன்மீதெனக்கு
நேரமில்லை என்றாலும்
ஆசைக்கு எல்லை இல்லை
என்ற உண்மை
அவளிடம் தெரிந்தது
பாசம் நிறைந்த பார்வை
இருளில் தேயும் மனதிற்கு
நிலவொளி ஆகிறது
இன்னிசையாக இதயதுடிப்பும்
உனை காணும் போதெல்லாம்
ஆனந்த யாழாய்
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள் என் உயிரே
பல முறை
தோற்று போனது பிரிவு
நம் பிரியத்திடம்
நம்மை பிரிக்க நினைத்து
பிடிக்காத உளறல்களும்
பிடித்து போனது
உதிர்ப்பது
உன்னிதழ்கள் என்பதால்
💖 பக்கம் 195 / 478
📋 Copied