கருங்கூந்தலை கலைத்திடும்
தென்றல் காற்றும்
உன் ஸ்பரிசத்தையே
நினைவூட்டி செல்கிறது
காதல் எப்போதும்
சத்தமாக சொல்லப்படாது
அது மௌனத்தில் மட்டுமே
பெரிதாக ஒலிக்கும்
கண்கள் கூட மயங்கி விடும் போது
விருப்பத்தின் அலை
உடலை முழுவதும்
வெப்பமாக ஆட்கொள்கிறது
உன் வாசனையே ஒரு போதை
அந்த நெருக்கம் ஒரு புதையல்
நெஞ்சுக்குள் வாழ
ஆரம்பித்த பிறகு
பிரிவுக்கு இடமில்லை
நினைவுகளுக்கு வழியில்லை
இதயத்தின் மௌன மொழியில்
காதல் பேசுகிறது ஆயிரம் கவிதைகள்
நீ நினைப்பது போல் என் கவிதை
எல்லாம் கற்பனை அல்ல நிஜம்
மையில்லா
உன் கிறுக்கலில்
பொய்யாய்
ஒரு கவிதையை
ரசித்தே கிறங்குது
மனமும்
நெருக்கம் பேசாமல்
சொல்வதையே
காதல் என்று அழைக்கிறார்கள்
அளவில்லாத
உன் அன்பு வேண்டும்
என் ஆயுள் முழுவதும்
💖 பக்கம் 189 / 478
📋 Copied