ஜெபிக்கின்றேன்
உன் பெயரை
அர்ச்சனையாய் தினம்
இதய கோவிலிலே
மூச்சு அருகில் வரும் போது
உலகம் தன் வேகத்தை குறைக்கிறது
சாய்ந்து கொள்ள
தோள் தேடினேன்
ஏந்தி கொண்டாய்
அன்பாய்
எங்கும் நிறைந்தவனாய்
நினைவாகி
கண்கள் பேசும் நேரத்தில்
மொழிகள் எல்லாம் சுமைதான்
சுவாசம் போலவே காதலும்
இருந்தால் கவனிக்க மாட்டோம்
இல்லாதால் உயிரே சிந்தும்
உன் பிரிவின் வெப்பத்தில்
ஆவியாகி விட்டது
கண்ணீர் குளம்
ஆகாயத்தை அண்ணாந்து
பார்த்து காத்திருக்கிறது
மீண்டும் உன் பிரிய
மழையில் நனைய
நின்று திரும்பிப்பார்க்க
விடவில்லை நாணம்
நீ நிழலாய்
பின்தொடர்கிறாய்
என தெரிந்தபின்பும்
நான் சரியில்லை
என்று சொல்லாமலேயே
அது தெரிந்து கொள்ளும்
இதயம் நீ
விரலின் மென்மை
தவழும் தோளில்
காதல் பூத்தெழும்
மெளனமே உணர்வு
மனம் தன்னுடைய திசையை
கண்டுபிடிக்காத தருணமே காதல்
💖 பக்கம் 185 / 478
📋 Copied