நான் கண்ட
வெண்மேகம் கூட
உன் முகம் போல்
சுத்தமாய் தெரிகிறது
நெருக்கம் அதிகரிக்கையில்
மூச்சே ரொமான்ஸின் சாட்சி
உடல் பேசும் மொழியில்
ஆசை தீவிரமாக
கவிதை எழுதுகிறது
தழுவிச்செல்லும்
தென்றலாய்
உன் நினைவும்
மனதை வருடிச்செல்கிறது
பாசத்தின் மெளனம்
சில சமயங்களில்
சொற்களைக் காட்டிலும்
பெரிதாக உரையாடும்
துடிக்கும்
இதயமும்
உன்
பெயரைச்சொல்லியே
குதிக்கின்றது...
உன்னோடு கரையும்
நேரங்களில்
வாழ்க்கையும்
அழகுதான்
காதல் என்பது
பேசுவதில் இல்லை
ஒருவருக்காக அமைதியாக
காத்திருப்பதில் இருக்கிறது
அருகில் நின்ற சுவாசமும்
வாழ்க்கையின் இனிய இசையாக மாறுகிறது
இயந்திர வாழ்க்கையும்
இனிமையாகிறது
என்னிதய வீணையில்
ஸ்வரங்களாய் நீயிருப்பதாலேயே
💖 பக்கம் 183 / 478
📋 Copied