கண்கள் மூடிய நேரத்தில் கூட
இதயம் ரொமான்ஸ்
வரிகளை எழுதுகிறது
கண்கள் மூடிய நேரத்தில் கூட
இதயம் ரொமான்ஸ்
வரிகளை எழுதுகிறது
மணல் தரையில்
தடம் அழிந்த
போதும்
என் மன தளத்தில்
ஆழமாய்
தடம் பதித்தே
தொடர்கிறாய்
அழகாக பயணத்தை
பஞ்சணையில் இல்லாத
மென்மை
உன் நெஞ்சணையில்
உறக்கமும் வருடுது
கண்களை மயிலிறாகாய்
இதயத்தில் விதைக்கப்படும் பாசம்
காலத்தின் புயலிலும்
வாடாத மரமாக நிற்கிறது
என்ன தவம் செய்ததோ
உன் தொடுதிரை
அலைபேசி நித்தமும்
உன் விரல்கள் தீண்டுவதற்கு
வார்த்தையின்றி தொடும் பார்வையில்
இரு உயிர்கள் ஒன்றாக கலந்து
புதிய உலகை உருவாக்குகின்றன
எட்டிப்போக
எத்தனித்தாலும்
எனை கட்டிப்போடுகிறது
உன் கரங்களின்பிடி
பொழுதுபோக்குக்காக
உன்னிடம் பேசவில்லை
பொழுதெல்லாம் நீ வேண்டும்
என்பதால் தான் பேசுகிறேன்
மாலையின் சிவந்த வானத்தில்
காதல் ஒரு மென்மையான
நிழல் போல
மனதை சுற்றி ஆடும்
வாட்டம்
என்பதும்
ஏது நீ
மனதோடு மலராய்
இணைந்திருக்கும்
போது