நம்மை முழுவதும்
புரிந்துக் கொண்ட ஒருவர்
நம் வாழ்வில் இருப்பது
நமக்கு கிடைத்த
மிக பெரிய வரம்

மௌனத்தில் மறைந்திருக்கும் ரசனைகள்
காதலை ஓரளவாக அல்ல
ஆழமாக உணர வைக்கின்றன

விரல்களின் இளமை
தோல் மீது பயணிக்கும்போது
உடல் கவிதையாக மாறுகிறது

இருளின் மத்தியில்
விழிகள் சிக்கும்போது
கனவுகள் கூட ஓர் அலறல்

காதல் எப்போதும்
சத்தமாக சொல்லப்படாது
அது மௌனத்தில் மட்டுமே
பெரிதாக ஒலிக்கும்

நீ விடைபெறும்
போதெல்லாம்
என்னிடம் தாவிக்கொள்கின்றது
சிறு குழந்தையாய்
உன் நினைவுகள்...!

சோம்பல் முறிக்க
எழும் புத்துணர்ச்சியாய்
உன் நினைவு
தொற்றி கொள்ள
மனமும்

மௌனத்தில் பேசும் மொழி
காதலின் அடையாளம்

என் இதயத்தின் மொழிக்கு
அகராதி தேவையில்லை
உன் கண்கள் பேசும்
காதல் ஒன்றே போதும்

மெதுவாக நடக்கும்போதுதான்
காதல் மனதிற்குள்
ஓடத் தொடங்குகிறது