காலம் கடந்து போனாலும்
முகத்தின் முதல் பார்வை மறையாது
காலம் கடந்து போனாலும்
முகத்தின் முதல் பார்வை மறையாது
தயக்கம் இருந்தாலும்
நெருக்கத்தை தூண்டுகிறது
உன் நேசம்
நீ என்னவன் என்று
புரியாமலே
நெருங்கிய வார்த்தைகள்
உருக்கமாக காதலிக்கச் செய்கின்றன
சிக்கிமுக்கி
கற்களாய் விழிகள்
மோதிக் கொண்டதில்
சிதைந்து
போனதென்னவோ மொழிகள்
நெருக்கம் வார்த்தைகளால் அல்ல
மூச்சின் ஓசையால் அளவிடப்படுகிறது
சத்தமின்றி யுத்தம்
செய்கிறது
உன் இம்சைகள்
போராடுது மனமும்
வெட்கத்தில்
போர்க்களமாய் சுகமாக
உனக்காக
பொறுமையாக
காத்திருப்பதும்
ஒரு அழகு தான்
விட்டு விட்டு
துடிக்கும்
இடை வெளியையும்
நிரப்பி விடுகிறாய்
அன்பின் நேசத்தால்
இதயத்தை
எத்தனை
ஊடல் வந்தாலும்
இறுதியில்
மனதில் நிற்பது
உன் சமாதான
முத்தமே
இதழ்கள் என்னை
தீண்டும் தருணம்
நேரத்தை நின்றுபோய்
ரசிக்க வைத்துவிடுகிறது