சிந்தனையின் மையமாகியவள்
கனவுகளின் தொடக்கமும் கூட

மௌனத்திலும் காதல் பேசும்
பிரிவிலும் இதயம் தேடும்

உதடுகளை தொடும் நேரம்
என் மனதின்
எல்லா வார்த்தைகளும்
மௌனமாகின்றன

சிரிப்பு அவளின்
உதட்டில் தங்கும்போது
உலகம் மெதுவாகி விடுகிறது

கை பிடித்த அந்த ஒரு நொடியில்
வாழ்நாள் முழுதும் பயணம் முடிவுற்றது

அத்தனை சேட்டைகளையும்
செய்துவிட்டு
அமைதியாய் உறங்கும்
குழந்தையாய்
பல நேரங்களில் நீயும்
ரசிக்கிறேன் உனை நானும்

தொல்லைகள்
இல்லா தொலைவில்
நம் உலகமும்
பேரழகு

மனமும்
குழந்தை தான்
உன்னையே
நினைப்பேன்
என்று பிடிவாதம்
பிடிப்பதில்

மௌனத்தில் பேசும் கண்கள்
காதலின் முதல் கவிதை

என் ரசனையை
மறந்து
உன் ரசனையின்
ரசிகையாக
மாறினேன் நான்