தினமும்
நிழலாய் தொடர்கிறேன்
நீ என் ஒளி
என நினைத்து
தினமும்
நிழலாய் தொடர்கிறேன்
நீ என் ஒளி
என நினைத்து
தொட்ட இடம் கருகும்
ஆனால் அந்த வலிக்கே
என் காதல் அடையாளம்
இதய துடிப்பு கூட
காதலின் பெயரை பாடுகிறது
காதல் வார்த்தைகளில்
அடங்காத மெளன மொழி ❤️
எல்லாவற்றுக்கும்
காலாவதி காலம் ஒன்று
இருக்கத்தான் செய்கிறது
உன் அன்பு மட்டும்
விதி விலக்கா என்ன
வெப்பமான சுவாசத்தில்
ஒரு முழு இரவின் காதல்
அடங்கியிருக்கிறது
மௌனமும்
பேசும்
என்றுணர்ந்தேன்
காதல் மொழி
உன்னருகில்
விரல்களின் உறையாடலில்
தீப்பிழம்பாய் மூள்கும் நம் ராகம்
மொழியில்லா
ஒரு தாலாட்டு
உன்னிதழின் முத்தம்
காற்று தீண்ட
சாயும் நாணலாய்
சாய்கிறேன் நானும்
உன் கண்கள்
காதலாய் தீண்ட
நாணத்தில்