உதடு தொடும் கண்ணிமை தருணம்
காமத்தை மின்னலாக மாற்றுகிறது

இன்னொரு
குழந்தை பிறந்தாலும்
உன்னை சொல்லியே
அவனை ரசிப்பேன்
நீ எனக்கு கிடைத்த
முதல் வரம்

பார்வை வழியாகச் சென்ற பாசம்
வாழ்நாள் பிணையாகி விட்டது

மலர்ந்த
ரோஜா போல்
சிரிக்கிறாய் என்றேன்
மீண்டுமொரு வெட்கச்
சிரிப்பை
உதிர்த்துச் சென்றாள்

தேகத்தின் அருகில் வந்த போதே
துடிப்பு தன் ரகசியத்தை கசக்கிறது

மூச்சு கூட
காதலின் இசையை
சொல்லும் போல
மெதுவாக நெஞ்சுக்குள்
கலந்துவிடுகிறது

சிறகடிக்கும்
நம் நினைவுகளை
சிதறாமல்
கோர்க்கின்றேன்
உன் அன்பெனும்
நார்க்கொண்டு
உதிர்ந்திடாத
மாலையாய்

என் அன்பை
சுவாசிக்கும்
உயிராகவே இருந்திடு
உன் சுவாசத்தில்
கலந்த உறவாகவே
நானும் வாழ்ந்திடுவேன்

என் கவலைகளுக்கு நீ
மருந்தாகின்றாய் உன்
கவலைகளை மறைத்து
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள் என் இதயமே

மழையென கொள்கிறேன்
உனை முழுமையாய்...
நனைத்து விடு
எனை
தினம் தினம்
உன் அன்பால்...
புரிதல்களால்