தொலைதூரம் நீ போனால்
உன்னை தேடி வெகுதூரம்
பயணிக்குறது உள்ளம்
பலமுறை
முயற்சித்தும்
தோற்றுப்போனேன்
வீணையை மீட்ட....
உன் நினைவுகளென்னை
மீட்டிக்கொண்டிருப்பதால்
பலமுறை கடந்து போனாலும்
அவள் மட்டும்
ஏனோ பக்கத்தில் இருப்பது
போன்ற உணர்வு
மனதை வருடிப்போகிறது
அணைத்து வருடிக்
கொண்டிருக்கும்
காதலைக் காட்டிலும்
நினைத்து வாழ்ந்து
கொண்டிருக்கும்
காதல் புனிதமானது
விழி பேசும்
பாஷைகளை
மனம் அறிந்தாலும்
மொழி வரவில்லை
விடைகூற
உன் சுவாச
காற்றின் தீண்டலில்
நட்பின் பாதையில்
தொடங்கிய பயணம்
கண்கள் பேசும்
மொழியால் காதலாக மாறியது
நீ எனது வாழ்க்கையின்
அழகான அத்தியாயம்
எப்போது என்றும்
உன்னை நினைக்கும்போது
என் இதயம் மகிழ்கின்றது
ஏதோ
யோசிக்க நினைத்து
உன்னை (சு)வாசித்து
கொண்டிருக்கின்றேன்
வீணான வார்த்தைகளின்றி
புரிந்துகொள்ளும் அந்த
ஒரே மனம் காதலின் சொந்தம்
மழைத் துளியால்
நனைந்த இரவில்
காதல் மென்மையான
மூச்சுகளால் மலர்கிறது
💖 பக்கம் 125 / 478
📋 Copied