காமம் என்பது
ஆசையின் குரல் அல்ல
உடல் தேடும் இசை

இடைவெளி அதிகமானால்
காதலுக்கு ஆழம் பெரிதாகும்

ஊடல்கள் நமக்குள்
புதிதில்லை என்றாலும்
பல மணிநேர
மௌனத்தின் பின்
உன் குரல் கேட்க
கண்களும் நனையிது
ஆனந்தத்தில் தொலைத்தது
கிடைத்தது போல்

மொழிகள் தேவையில்லை
காதலின் தீண்டல்
தனியாக பேசும்

இதயம் தூங்கும்
நேரத்தில் கூட
அவளின் நினைவு விழித்திருக்கும்

தடுத்த போதும்
நிறுத்த வில்லை
உனை எதிர்
பார்த்திருப்பதை
விழி

வாழும் போது மட்டுமல்ல
வாழ்க்கை முடியும்
நேரத்திலும்
வாழும் காதல் என்றுமே
அழகானது

அன்பின் மொழி
உரைக்கும் போது
நான் உன்னுடைய
காதலின் சங்கீதம்
ஆகி விடுகிறேன்

மௌனத்தில் கூட
காதல் உதிரும் போது தான்
உண்மை நெருக்கம் தெரிகிறது

உன் மௌனத்திலும்
எனக்கு காதல் தெரிகிறது