பூட்டிக் கொண்டேன்
உன்னில் என்னை
தொலைந்தாலும்
உன்னோடு
தான் என்றே

தூரம் எதுவாக இருந்தாலும்
மனதின் அருகில் ஒருவரை
வைத்திருப்பது காதலின் ராகம்

மௌனத்தில் ஒளிந்த காதலுக்கு
நெஞ்சம் மட்டும்
மொழிபெயர்ப்பாளர்

உன்னைக் காணாத ஒரு நாள்
என் கண்களுக்கு இரவாகிறது

அவள் கண்களை
பார்த்து தான்
கவிதை என்ற பெயரில்
கிறுக்க தொடங்கினேன்
வரிகளாக அவளுக்காக

உன் கரம்பற்றி
நடக்கையில்
நானும் வழியறியா
குழந்தை தான்

அழகானவை
எல்லாம்
உன் அன்பின்
அடையாளங்கள்

உன் வெற்றிடத்தை
நிரப்பி கொள்கிறேன்
நம் நினைவை
கொண்டு
நீயில்லா பொழுதுகளில்

மூச்சை அடக்க முடியாத
அந்த கணம்
இருவரும் காலத்தை
மறந்த நேரம்

உன் இதழ்களின்
மௌனத்தில் கூட
என் ஆசைகள்
திசை மாறுகின்றன