தொடுதலில் துடிக்கும் இதயம்
பெயரில்லா உணர்வின் சாட்சியம்
தொடுதலில் துடிக்கும் இதயம்
பெயரில்லா உணர்வின் சாட்சியம்
உறவில் உண்மையான காதல்
ஒருவரின் பார்வையில் கூட
இடைவெளியில்லாத
நெருக்கத்தை உணருகிறது
இதயம் தேடும் பாசம்
அமைதியின் ஆழத்தில்
நிழலாய் வந்து மனதைத் தழுவும்
உன் மடியில் தலை சாய்ந்திருக்கும்
இந்த நொடி போதும் பெண்ணே
இந்நொடி என் உயிர் போனாலும்
சந்தோஷம் நாளை என்ற
கனவு களைந்து போகட்டும்
எந்த ஓசையும்
இனிமையில்லை
உன் நினைவுகளின்
சத்தத்தை போல்
மனதின்
வெறுமையையும்
நிறைத்து விடுகிறாய்
நினைவில்
வழுக்கிக்கொண்டே
வரும் நினைவுகள்
ஒரு முத்தம் போல
நெஞ்சை உலுக்கும்
காதல் என்பது
கண்களில் தொடங்கும்
ஆனால் இதயத்தில்
உயிரோடு நிலைத்து விடும்
பாசம் ஒரு வரி அல்ல ஒரு நிலை
அகதியாக நான்
அகப்பட்டு கொண்டேன்
உன் இதய தேசத்தில்...