இரவில் நிலா தோன்றுவது போல
நினைவில் அவள் ஒளிர்கிறாள்
இரவில் நிலா தோன்றுவது போல
நினைவில் அவள் ஒளிர்கிறாள்
சிறகிருந்தும்
சிறைபட்டிருக்கின்றேன்
உன் மனக்கூண்டில்...
கண்ணுக்கு தெரியாத
காற்றாய் தாக்குகிறாய்
காதலில்
எனை அமைதியாய்
கடந்தே
உறக்கம்
கலையுமுன்
தட்டியெழும்பும்
கடிகாரமுள்ளாய்
நீயும் எழுப்புகிறாய்
மனதை நினைவுகளால்
விரைவான மூச்சின் நடுவே
ஆசை வெடித்து கனவுகளை
தீயாக மாற்றும் சக்தியாகிறது
நெஞ்சின் ஒவ்வொரு துடிப்பிலும்
உன்னால் எழுதப்பட்ட
கவிதைகள் ஒலிக்கின்றன
இருவரின் அமைதி கூட
சில நேரங்களில்
காதல் உரையாடலாகும்
நிமிடங்களில் பிறந்து
வாழ்நாளெல்லாம் நினைவாக
நிற்பது காதல்
பார்வையின் ஆழத்தில் தான்
உண்மையான பாசம்
மறைந்து கிடக்கிறது
முப்பொழுதும்
நீயென் அருகில்
இல்லாவிட்டாலும்
எப்பொழுதும்
என் நினைவிலிருக்கிறாய்
என்னவனே