விரல் தொடாமல்
வாசலில் நின்று பேசும்
ஒரு பார்வை தான்
காதலின் நெகிழ்வான மொழி

வாழ்வின் வரம்
உன்னுடன்
நகரும் நிமிடங்கள்

இதயம்
தவிக்கும்போது மட்டுமே
காதல் உணர முடியும்

இருவர் தூரத்தில் இருந்தாலும்
இதயத் துடிப்பில்
ஒன்றித்தான் இருப்பார்கள்

உன் இதயத்துக்குள்
ஒரு வீடு கட்டிக்கொண்டு
வாழ்வது என் கனவு

உன்னுடன் செலவழிக்கும்
ஒவ்வொரு நொடியும்
என் வாழ்வின் வர்ணம்

உணர்ந்த தனிமை
உணராத வெறுமை
நடுவே சிக்கித் தவிக்குது
உன் நினைவெனும் அருமை

மாட்டி விட்டாய்
வளையல்களை
மனமும்
மாட்டி கொண்டு
சல சலக்குது
உன்னிடம்

ஆயிரம் இரவுகள்
காத்துக் களைத்து
போனது என் இதழ்கள்
உன் இதழ் முத்தம்
இல்லாமல்

காத்திருப்பும்
சுகமே
உன் வரவுக்காக
என்பதால்