வான் திரைக்குள்
ஒளிந்து கொண்டாலும்
நிலவொளியின்
துணைக்கொண்டு
உனையடைவேன்
என்னவனே

இடம் மாறிய
பின்னே இதயமும்
சீராய் துடிக்குது
உன் பெயரை சொல்லி

இரவு தன் இருளில்
மூடிக்கொள்ள விரும்புவது
போலத்தான் காதலும்
ஒருவரில் முழுமையாக
மறைந்து வாழ்கிறது

காத்திருந்த காதலொன்று
இளமையாயிருக்கிறத
முதுமையிலும்

மௌனத்தில் கூட
பெயர் சொல்லாத காதல்
உள்ளம் முழுவதும் தங்கியிருக்கிறது

நீ புன்னகை காட்டி
நடந்து வரும் வீதியெங்கும்
உள்ள பூக்கள் கூட
தலை கவிழ்ந்து கொள்ளும்
உன் இதழ்களோடு
போட்டியிட முடியாமல்

கண்ணோட்டம்தான் பழகியது
ஆனா மனசு ஏற்கனவே
உயிரோட பழகிடுச்சு

சிறு தீண்டலிலே
பிறக்கும் நடுக்கம்
அந்த ஆழமான
காதலின் கையொப்பம்

நீ இல்லாமல் நான் இல்லை
என்பது கூட பொய்யாக
இருக்கலாம் ஆனால்
உன்னை நினைக்காமல்
நான் இல்லை என்பதே மெய்

ஒருமுறை உன்னை
கருவில் சுமக்க ஆசை
உன் மனைவியாக மட்டுமல்ல
உன் தாயாகவும்