இரவின் அமைதியை
உடைக்கும் மூச்சுகள்
இதயங்களை ஒன்றாக
கட்டிப்போடுகின்றன

மூடப்படாத கண்கள் கூட
அவன் நிழலை தேடித்தான் காணும்

யாருமற்ற சாலையில்
உடன் பயணிக்கிறது
உன் நினைவுகள்
மட்டும் பேரிறைச்சலுடன்

என்னோடு நீயிருந்தால்
உன் கண்ணோடு
நானிருப்பேன்
காலமெல்லாம்
என் கண்ணாளா

வரும் ஜென்மத்திலும்
துணை நீயே
என்றால்
இருப்பேன்
தவம் நானும்

இதயம் சிலருக்காக மட்டும்
துடிக்க கற்றுக்கொள்கிறது

மனதில் மறைக்க
தெரிந்த எனக்கு
கண்களில்
மறைக்க தெரியவில்லை
உனை ரகசியமாய்
ரசிப்பதை

நீ தொலைதூரம் சென்றாலும்
தொலைபேசியின் தொடர்பில்லாமல்
இருந்தாலும் தொடர்ந்து தொல்லை
செய்துகொண்டுதான் இருக்கிறாய்
உன் நினைவுகளால்

மேடு பள்ளமென
சந்தித்தாலும்
அழகாய் ஓடும்
நதியாய்
என் மனமும்
நீந்துகிறது உன்னில்

ஆயிரம் மைல்கள்
தொலைவில் இருந்தாலும்
உன்னை விட வேறு
யாரும் என் இதயத்திற்கு
நெருக்கமானவர்கள் அல்ல