வார்த்தைகள் இல்லாத நேரத்தில்
கண்கள் காதலிக்க ஆரம்பிக்கும்

ரோஜா இதழ்களும்
தலை குனிந்ததோ
உன் இதழிடம்
தோற்ற சோகத்தில்
இனிய காதலர் தின
நல்வாழ்த்துகள் என் அழகியே

பார்வை தடவிய
இடங்களில்
ரகசிய வாசல்கள்
திறக்கின்றன

ஒரு நாளை
கடப்பது
பல நாட்களை
கோர்த்தது
போல் இருக்கிறது
நீயில்லா நாழிகையில்

நினைவுகள் மெதுவாக சேர்ந்து
இதயம் முழுவதும் பாசத்தின்
வெப்பமாக பரவுகின்றன

விழிகள் உறங்கிட
மறுக்கும்
போதெல்லாம்
உறங்க வைக்கிறான்
முத்த சத்தத்தில்
தாலாட்டி

தொலைதூர காதலின் வலி
நேசிக்கும் ஒருவரை
நினைத்த நேரம்
பார்க்க முடியாமல்
பேச முடியாமல் போவது தான்

இதயங்கள் இணைந்தால்
மௌனமே இனிமையான மொழி

விழிகள் பேசும் போது
வார்த்தைகள் தாமதிக்கின்றன

கோடையும்
மார்கழியே
உன்னருகில்