நம்மை நேசிப்பவர்கள் நம்மை
விட்டு போக மாட்டார்கள்
என்று நினைப்பது நம்
பெரிய தவறு தான்

தெரியாமலே வந்தவள்
நெஞ்சில் வேரூன்றியவளானாள்

இதயம் தொடும் இடம்
வாழ்க்கையின் அமைதி

கோர்த்த வார்த்தைகளை
சேர்க்கும்முன்
கொட்டித் தின்கிறது
வெட்கம்

இதயம் பறிக்காமல்
மனதை முற்றிலும்
கொள்ளையடிப்பதே
ஆழமான காதல்

உன் ஆசைகளில்
நான் கனவாக வந்தாலும் பரவாயில்லை
ஆனால் உன் வாழ்க்கையில்
நிஜமாக இருக்க விரும்புகிறேன்

காதல் திடீரென்று வரும்
ஆனால் இதயத்தில்
நிலைத்திருக்கும்

ஜன்னலை
பூட்டியபின்னும்
காட்சியை
ரசிக்க தவறாத
விழிகளைபோல்
மனதை பூட்டியபின்னும்
உன் நினைவுகளை
நினைக்க தவறியதில்லை
மனம்...

மெல்ல மெல்ல
பறிபோகுது மனம்
நீயெனை கொள்ளையடித்த
தருணங்களில்

காதல் தொடும் நொடி
வாழ்நாளின் வெறுமையை
நிரப்பும் நிரந்தர நினைவு ஆகிறது