சிலரை விட்டு
விலக முடிவதில்லை
காரணம் உலகமாய் நினைத்து
வாழ்ந்து விட்டதாலும்
உயிர் கூட உடலை விட்டு
பிரிய மறுப்பதில்லை
ஆறுதல் என்பது
உன் காயத்திற்கு
தற்காலிக தீர்வு
மாறுதல் என்பது
உன் காயத்திற்கு
நிரந்திர தீர்வு
எப்பொழுதும்
ஆறுதல் தேடாதே
மாறுதல் தேடு
சிரிப்பும் சோர்வும்
சேரும் போது தான்
வாழ்க்கையின்
முழு வடிவம் தெரியும்
சரினு பட்டா
விட்டுக்கொடு
தப்புனு பட்டா
தள்ளி நில்லு
மகிழ்ச்சியை சேமித்து
வைப்பதில்
எந்தப்பயனும் இல்லை
அவ்வப்போது
செலவிட்டு விட வேண்டும்
சேமிப்புக்குப் பின் செலவு
செயல்களில் இருக்கும்போது
வார்த்தைகளுக்கு இடமில்லை
உறவுகள் தூக்கி
எறிந்தால் வருந்தாதே
அவர்கள் முன்
வாழ்ந்து காட்டு
மகிழ்ச்சியாக நிம்மதியாக
வாழ்க்கை ஒரு ஓவியம்
வண்ணத்தை நாம் தேர்வு செய்கிறோம்
எப்போதும் தீயவை
ஜெயிப்பது போல
தோன்றினாலும்
இறுதியில் வெல்வது
தர்மமே ஆகும்
📖 பக்கம் 98 / 606
📋 Copied