விரிக்காத வரை
சிறகுகள் பாரம்தான்
விரித்துப் பார்த்தால்
வானம் கூட தொடுதூரம்தான்
சில சிறந்த தருணங்களுக்காக
காத்திருக்கும் பொழுதுகளில்
பல சிறந்த வாய்ப்புகள்
நம்மை கடந்து சென்றுவிடும்
நீயாக நீயிருந்தால்
மற்றவர்களின் பார்வைக்கு
நீ திமிராகவே
தெரிவாய்
எதுவும் சுலபமில்லை
ஆனால் எல்லாம்
எளிது தான்
மனமிருந்தால்
மனம் அமைதியாக இருந்தால்
உலகமே அழகாகத் தெரியும்
வாழ்க்கை கடினமாக இருக்கலாம்
ஆனால் அதில் நம்பிக்கை
இருக்குமானால் திசை காணப்படும்
பணிந்து போ உன்
தகுதியை உயர்த்தும்
துணிந்து போ உன்
திறமையை உயர்த்தும்
எல்லாத் துன்பங்களுக்கும்
இரண்டு மருந்துகள் உண்டு
ஒன்று காலம்
இன்னொன்று மௌனம்
மொழிகள் ஆயிரம்
இருப்பினும் மௌனம்
மட்டுமே அழகாய்
பேசுகிறது யாரையும்
புண்படுத்தாமல்
நல்லவர்களாக நடிப்பவர்கள்
மத்தியில் சுயத்தோடு
இருப்பவர்கள்
என்றும் துரோகிகளே
📖 பக்கம் 97 / 606
📋 Copied