தற்பெருமை கொண்ட
பலரின் வாழ்க்கை பயணங்கள்
வெறும் தரிசு நிலத்தையே
வருங்கால தலைமுறைக்கு
சொத்தாக விட்டு சென்று இருக்கிறது
ஆண்மையில்
தாய்மை பேரழகு
என்பதால் என்னவோ
காண்பதற்குஅரிது
நிம்மதி கிடைப்பது
இடத்தில் அல்ல
மனநிலையில்
நேரம் செல்ல செல்ல
நாட்கள் நகர நகர
வருடம் கடக்க கடக்க
வருந்தும் நினைவுகள்
யாவும் மறைந்து போகும்
மகிழ்வித்த தருணங்கள்
யாவும் ஏங்கும் சுவடுகளாகும்
மன உறுதி இருந்தால்
எந்த சவாலும் கடக்க முடியும்
எண்ணம் உறுதியாக இருந்தால்
எண்ணியபடி உயரலாம்
நமது எண்ணம் தான் நம்முடைய
எதிர்காலத்தை உருவாக்கிறது
(எண்ணம் போல வாழ்வு)
மிகப் பெரிய
சாதனை படைக்க
விரும்பினால்
அதற்கான முயற்சியில்
சில காலம்
காணாமல் போக
தயாராக வேண்டும்
அஞ்சியும் வாழாதே
கெஞ்சியும் வாழாதே
சிலரின் அன்பு போலவே
சில கனவுகளும் நிஜமாகாது
சிரமங்களை எதிர்கொள்வது
உங்கள் சக்தியை
வெளிப்படுத்தும் வாய்ப்பு
📖 பக்கம் 54 / 606
📋 Copied