அன்பு என்பது
இருதயத்தின் மொழி
அதை பேசுவதற்கு
வார்த்தைகள் தேவையில்லை
ஒரு நொடியின் தைரியம்
ஆயுள் முழுதும் வெற்றியை தரும்
வாழ்க்கை ஒரு இசை
அதை ரசித்தால் மகிழ்ச்சி
மறுத்தால் கவலை
காயங்களை உருவாக்க
கத்திகள் தேவையில்லை
புரிதலற்ற வார்த்தைகளே
போதும் காயங்களை ஏற்படுத்த
சிலரின் மௌனம்
திமிரல்ல
அவர்களுக்குள்
இருக்கும் வலி
யாரையும்
சார்ந்து வாழாதே
உன் சுயத்தை
தொலைத்திடுவாய்
சுயமாய் வாழப்பழகு
உன்னையே நீ நேசிப்பாய்
தோல்வி பயமல்ல
முயற்சி இல்லாமையே
உண்மையான தோல்வி
நாட்கள் கடந்து போகும்
நிமிடங்களை நினைவாக
மாற்றுவது தான் வாழ்க்கை
ஆபத்தில் அறியலாம்
சில உறவுகளின்
குணங்களையும்
அவர்களின்
முக்கியத்துவத்தையும்
ஒவ்வொரு நாளும்
விடியும் போது
ஒரு எதிர்பார்ப்பு
முடியும்போது
ஒரு அனுபவம்
📖 பக்கம் 397 / 606
📋 Copied