இங்கே எதுவுமே
நிரந்தரமில்லை
நினைவுகள்
ஒன்றைத் தவிர
முடியாது என்றால்
முயற்சிக்கு எல்லை இல்லை
என்பதற்கான சான்று தான் நீ
துரோகத்தின் முதல் விதை
அதிகபட்ச நம்பிக்கையில் தான்
தூவப்படுகிறது
அனுபவம் அன்பாகச்
சொல்லித் தருவதில்லை
ஒருமுறை விழுந்தாலும்
மீண்டும் எழுந்து நிற்கும்
மனிதனையே வெற்றி அணைக்கிறது
சில தருணங்களில்
பலமாகவும்
சில தருணங்களில்
பலவீனமாகவும்
அமைந்து விடுகிறது
பிறர் மேல்
நாம் வைக்கும் நம்பிக்கை
உலக வரலாற்றைப்
படிப்பதை விட
உலகில் வரலாறு
படைப்பதே இனிமை
கவலைகள் ஒருபோதும்
வெற்றியைத் தருவதில்லை
முயற்சிகளே
வாழ்க்கை ஒரு சவாலான கடல்
நீந்த தெரியவில்லை என்றால்
அலைகளை அணைத்து கொள்ள
கற்றுக் கொள்
என் வலிகளை
புரிந்துகொள்ள வேண்டாம்
எனக்கும் வலிக்கும் என
புரிந்து கொண்டால் போதும்
📖 பக்கம் 342 / 606
📋 Copied