கடந்து வந்த பாதை
கண்ணீரால் நனைந்தாலும்
எதிர் வரும் பாதை
சிரிப்புடன் தோன்றட்டும்
நம்பிக்கை இல்லாத கனவு
வெறும் கற்பனைதான்
நிறைய பேர்
நான் நல்லவன்
நான் அடுத்தவங்களுக்கு
நன்மைதான் செய்கிறேன்
என்று நம்புவார்கள்
ஆனால் அதில்
அவர்களுக்கே தெரியாமல்
சுயநலம் கலந்து இருக்கும்
இதை மிகத்தெளிவாய்
சுட்டிகாட்டினால் அவர்களுக்கு
கோபம் வரும்
நீ எப்படி என்னைப் பற்றி
சொல்லாம் என்று
ஓடிக்கொண்டிருக்கும் காலத்தை
நிறுத்த முடியாது
ஆனால் அதில் சிறந்த தடத்தை
விட்டுச் செல்ல முடியும்
அணை உடைத்த
நீர் அழிவையே தரும்
மணம் உடைத்தவார்த்தை
இழிவையே தரும்
சிறிய குறைவுகளையும்
சமாளிக்க முடியாதவனுக்கு
பெரிய வெற்றிகளை
அடைய முடியாது
மழை மண்ணின் தாகத்தை
போக்குவது போல
மனித மனத்துக்கும்
புத்துணர்ச்சி கொடுக்கிறது
நிலவுக்கும் ஒரு நாள்
விடுமுறை உண்டு ஆனால்
உன் நினைவுக்கு என்றும்
விடுமுறை இல்லை
நடக்கும் பாதை
தெரியாமல் இருந்தாலும்
நம்பிக்கையுடன் எடுத்த
ஒரு படி கூட வாழ்க்கையை மாற்றும்
ஞாபகங்கள்
அழிக்கபடுவதில்லை
மாறாக ஆழமாக
விதைக்கபடுகின்றன
📖 பக்கம் 337 / 606
📋 Copied