சூரியன் உதிக்கும் போது
பிரகாசமாக காட்சியளிக்கும்
நான் வந்துட்டேன் என்று
பிரமாண்ட ஒளியுடன்
அதே போல்
நம்மை மட்டம் தட்டுபவர்கள்
முன் சூரிய ஒளியைப் போல்
பிரமாண்டமாக
சாதித்து காட்ட வேண்டும்
சிலரின்
உண்மையான அன்பால்
தவறுகள் கூட
மன்னிக்கப்படுகிறது
உண்மையான அன்புக்கு
பிரிவு என்பது
ஒரு தொடக்கம் தான்
மனதைப் போல
வலிமையான ஆயுதம்
உலகில் எதுவும் இல்லை
காலத்தை வீணாக்கும்
ஒவ்வொரு நொடியும்
வாழ்வின் சுவையை குறைக்கிறது
தவறை நியாயப்படுத்தும்
நண்பனை விடவும்
சுட்டிக்காட்டி திருத்தும்
நண்பன் தான் சிறந்தவன்
உயரம் முக்கியமில்லை
நிலைத்திருப்பதே சாதனை
அடைய வேண்டிய இலக்கு
ஆயிரம் என்றால்
பாதை கடினமானாலும்
பயணிக்கத்தான் வேண்டும்
வேடிக்கை பார்ப்பவர்கள்
என்ன நினைத்தால் என்ன
நகர்ந்து கொண்டே இருப்போம்
நல்லதோ கெட்டதோ
நடப்பது நமக்குத் தான்
வாழ்க்கையில
பின்னாடியும் போகாமல்
முன்னாடியும்
போக முடியாமல்
இதற்க்கு இடையில்
நிக்குறதுக்கு
பெயர் தான் வாழ்க்கையோ
📖 பக்கம் 328 / 606
📋 Copied