காலம் கற்றுத்தரும் பாடம்
புத்தகத்தைக் காட்டிலும் ஆழமானது
முட்களையும் ரசிக்க
கற்றுக்கொள் வலிகளும்
பழகிப் போகும்
காலையில் எழும்போதே
என்னால் முடியும்
என்ற மந்திரத்தை உச்சரி
உன் தன்னம்பிக்கை முன்
எந்தத் தடையும் நிற்காது
ஒருவரை மன்னித்துவிடும்
அளவிற்கு நல்லவராக
இருங்கள் ஆனால் அவரை
மீண்டும் நம்புமளவிற்கு
முட்டாளாக இருக்காதீர்கள்
துரோகத்தின் தீயில்
எரிந்த நம்பிக்கை
மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது
அது சாம்பலாகி
காற்றில் கரைந்துவிடும்
வெற்றியின் இனிமை
கசப்பான போராட்டங்களின்
பின்பு மட்டுமே உணரப்படுகிறது
வேசம் போடும்
உறவுகளுக்கு நடுவில்
உண்மையான பாசம்
தோற்றுத்தான் போகிறது
அவர்களெல்லாம்
அப்படி கிடையாது என
நினைக்க வைக்கும் சிலர்தான்
அப்படியாகவே இருக்கிறார்கள்
முயற்சி நிறுத்தப்படும்
போது தான்
தோல்வியாகிறது
தொடரப்படும் போது
அதுவே வெற்றியாகிறது
உங்கள் முயற்சியை
ஒரு போதும் நிறுத்தாதீர்கள்
எல்லா மௌனங்களும்
திமிரல்ல
சில சொல்ல முடியாத
காயங்கள்
📖 பக்கம் 322 / 606
📋 Copied