பிறரை குறைத்து பேசி உன் மதிப்பைக்கூட்ட நினைக்காதே அப்படி செய்வதால் கூடுவது உன் தலைக்கணமே தவிர மதிப்பல்ல உணர்ந்தவன் உயர்வான்
வாழ்க்கையை கணக்கில் போடாதே அனுபவத்தில் வைத்து பொருள் காண்
என்னை தொல்லையென நினைக்காமல் இனி இல்லையென நினைத்துக்கொள்
எளிதில் மேலே போக எஸ்கலேட்டர் உதவினாலும் முதல் படியிலும் கடைசி படியிலும் கவனமும் நிதானமும் தேவை வாழ்க்கையில் மேலே போகவிரும்புபவர்களுக்கும் இதே கவனமும் நிதானமும் தேவை
கடினமான பாதைகளே மிக அழகான இடங்களுக்கு கொண்டு செல்கின்றன
எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் எல்லா விசயத்திலும் அறிவாளித்தனமாகவே சிந்திக்கனும் என்பது ஆகச் சிறந்த அறிவீனம்
யாரோ போட்ட கோட்டில் ஓடாதே உனக்கான பாதையை நீயே செதுக்கு சுயமாகச் சிந்திப்பவனுக்கு அழுத்தம் என்பதே இருக்காது
வாழ்க்கை ஒரு கடல் நீந்தத் தெரியாதவர்கள் அதனைப் பயமாகவே பார்ப்பார்கள்
முதலில் நம்பிக்கை பின்னர் முயற்சி கடைசியில் வெற்றி இது தான் நம்முடைய திரிசூலம்
உங்கள் வலிமை உங்கள் நம்பிக்கையில் இருக்கிறது அதை தவிர்க்காதீர்கள்