சிரிப்பும் சோர்வும் கலந்து தான் வாழ்க்கையின் உண்மையான ரசம் உருவாகிறது
தோல்வி வழிகாட்டும் வரை வாழ்க்கை செல்லும் பாதை புரியாது
ஒரு அன்பான வார்த்தை ஆயிரம் மாத்திரைக்கு சமமாகும்
ஒவ்வொரு தவறும் ஒரு கற்றல் நேரம் ஒவ்வொரு தோல்வியும் ஒரு சோதனை அல்ல ஒரு பாடம்
பொய்யை அப்படியே ஏற்றுக் கொள்கின்ற உலகம் உண்மையை மட்டும் எப்போதுமே எளிதில் ஏற்றுக் கொண்டதில்லை
கண்ணீர் வழியும் நேரத்திலும் நம்பிக்கை உடைய மனம் தான் நாளைய ஒளியை உருவாக்கும்
வெற்றிக்கு வழி கேட்காதே அதை உருவாக்கு
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தருணங்களும் நினைவுகளாக மாறிக்கொண்டே இருக்கின்றன ஒவ்வொரு மனிதர்களும் பாடங்களாக மாறிக் கொண்டே இருக்கிறார்கள் புதிது புதிதாக நானும் கற்றுக் கொண்டே இருக்கிறேன் இதுதான் வாழ்க்கை
எத்தனை நாட்களுக்குப் பிறகு மழை பூமிக்கு வந்தாலும் ஆசையாய் அணைத்து கொள்கிறது மண்
பொறாமை இல்லாத இடத்தில் தான் உண்மையான நட்பு உண்மையான உயர்வு இருக்கும்