சோர்வாக இருப்பது தவறு இல்லை ஆனால் அதில் நீடித்து நிற்பது தான் உன் வளர்ச்சிக்கு பெரிய தடையாக இருக்கும்
காலத்திற்கு தகுந்த மாதிரி மாறுனாதான் நாகரிகம் என்ற காலம் போய் ஆளுங்களுக்கு தகுந்த மாறி மாறுனாதான் நாகரிகம் என்ற காலக்கொடும வந்துருச்சு
ஒப்பீடு நம்பிக்கையை களைக்கும்
சிரமங்கள் வந்தால்தான் திறமைகள் விழித்தெழும்
பிறர் அடைந்த மகிழ்ச்சியை வெறுப்பவன் தன்னுடைய அமைதியை இழந்துவிடுகிறான்
தொடங்கும் துணிவு இருந்தால் முடிவுக்கு பயமில்லை
உங்களது கண்ணீரை யாரும் அறிவதில்லை உங்களது வலிகளை யாரும் உணர்வதில்லை உங்களது இழப்புக்களை யாரும் தேடியதில்லை இவர்கள் தான் உங்களின் குற்றங்களை மட்டும் பட்டியலிடுவார்கள்
முடிவில்லாத உழைப்பு தான் முடிவில்லாத வெற்றிக்கான துவக்கம்
புதிய பாதைகளைத் தேடுங்கள் தடைகளைத் தாண்டிச் செல்லுங்கள் அனுபவங்களை சேகரியுங்கள் வாழ்க்கையை வாழுங்கள்