உதிர்வோம் என தெரிந்தும் பூக்கள் மலர மறுப்பதில்லை
எது நடந்தாலும்
சிரித்து விட்டு
கடந்து செல்
வாழ்க்கை வசமே
விடை இல்லாத
கேள்விகள் தான்
மனதை அதிகம் புண்படுத்தும்
போலி நண்பர்கள் நிழல்கள்
போன்றவர்கள் சூரியன்
பிரகாசிக்கும்போது அவர்கள்
மறைந்து விடுவார்கள்
எல்லோர் வாழ்விலும்
நாம் வேராக இருக்க முடியாது
சிலர் வாழ்வில்
உதிரும் இலையாகவும்
சிலர் வாழ்வில்
வெட்டப்படும் கிளையாகவும்
இருந்துதான் ஆக வேண்டும்
அது தான் எதார்த்தம்
துரதிருஷ்டவசமாக
சில நினைவுகள்
இன்பமாக தொடங்கி
வலியாக முடிவடைகின்றன
நேசிக்க யாருமில்லாத
போது நம்மை யோசிக்க
வைக்கிறது இந்த வாழ்க்கை
காலம் அனைவருக்கும்
மருந்தாக இருக்க முடியாது
சிலர் அதை
தண்டனையாக உணர்வார்கள்
சில சூழ்நிலைகளை
கடந்து செல்ல
உடல் வலிமையை விட
மன வலிமையே
அதிகம் தேவைப்படுகிறது
சுமைகளைச் சிரிப்பாக
மாற்றுவதில் தான்
வாழ்க்கையின்
நிபுணத்துவம் இருக்கிறது
📖 பக்கம் 290 / 606
📋 Copied