கடப்பது எளிதென்றால் மறப்பதும் எளிது தானே சில வலிகளையும் சில துரோகங்களையும்
எதிர்பார்ப்புகள் பல என் மனதில் எழுந்தாலும் ஏமாற்றமே என்றும் எனக்கு நிலையாகிறது
பணிந்து போ உன் தகுதியை உயர்த்தும் துணிந்து போ உன் திறமையை உயர்த்தும்
எண்ணம் உறுதியாக இருந்தால் எண்ணியபடி உயரலாம் நமது எண்ணம் தான் நம்முடைய எதிர்காலத்தை உருவாக்குகிறது
வலி தந்தவர்களையும் வாழ்த்தவே செய்கிறது உண்மையாய் நேசித்த நெஞ்சம்
விளக்கங்கள் பல கொடுத்து தக்க வைக்க படும் உறவுகள் உனக்கான உறவுகள் அல்ல
சில பிரச்சனைகளுக்கு தற்காலிக தீர்வு தூக்கம் பல பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு மௌனம்
நிமிடம் ஒன்றின் அமைதியே ஒரு நாளின் அமைதியை தீர்மானிக்கும்
ஒரு முட்டாள் தன்னுடன் வாழ முடியாமல் விட்டுப் போனவர்களை நினைத்து வருத்தப் படுவான் ஒரு புத்திசாலி தன்னை விட்டுப் போனவர்கள் வருத்தப்படும் படி வாழ்ந்து காட்டுவான்
இந்த உலகத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் ஒரு காரணம் உண்டு அதை தேடி அறிய தான் நமக்கு நேரம் இருப்பதில்லை