ஒவ்வொரு தவறும் ஓர் உன்னத பக்கம் திரும்பும் சந்தர்ப்பம் தான்
வலி என்பது மனதைக் குறைக்க அல்ல அதை நுட்பமாக்கும் அனுபவம்
தடைகள் நம்மைத் தடுப்பதற்கு அல்ல நாம் தாண்டும் உயரத்தைக் கூட்டுவதற்கே
தடைகள் பல வரலாம் தட்டிப்பறிக்க கூட்டமும் சில வரலாம் எதை கண்டும் அஞ்சாதே துணிந்து நில் முன் வைத்த காலை பின் வைக்காதே நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றியின் படிகள் தான்
பல பேர் தங்களுடைய அறிவாளி தனத்தை அடுத்தவரிடம் குற்றம் காண்பதில் மட்டும் தான் நிரூபிக்கிறார்கள்
பசி அடங்கிய பின் கிடைக்கும் உணவும் மனம் வெறுத்த பின் கிடைக்கும் அன்பும் பயனற்றது