வாழ்க்கை
முடியும் வரையிலும்
ஒரு புதிராகவே இருக்கிறது
புதிரைக் களைவதே
வாழ்வின் சுவாரஸ்யமாகி விட்டது
ஏதோ ஒரு வலி
ஏதோ ஒரு சோகம்
ஏதோ ஒரு தனிமை
தொடர்கிறது நம்மில்
பலரை
சுயநலம் என்னும்
குடைக்குள்
அனைவருமே
சூழ்நிலைக் கைதிகள்
தான்
உன்னை குறைத்து பார்க்கும் உலகம்
உன் உழைப்பை பார்த்து
வணங்கும் நாள் வரும்
சிரிப்பால் தொடங்கும் நாள்
சுமைகளை சிறிதாக்கிவிடும்
அறிவுரையினால்
புரிந்து கொள்பவரை விட
அனுபவத்திலிருந்து
தெரிந்து கொள்பவரே
அறிவாலும் மனதாலும்
பலசாலியாகிறான்
வரமாக கிடைத்த
உறவுகளை
உங்கள் அலட்சியத்தால்
இழந்து விடாதீர்கள்
காலம் கடந்த பின்
தவறை உணர்ந்து
ஒரு பயனும் இல்லை
வாழ்க்கையின்
வேகத்தைக் கண்டு
முறிந்து போய் விடாதே
பிரச்சனைகளுக்கு
ஏற்ப வளைந்து
கொடுத்து செல்ல
பழகிக் கொள்
எல்லாம் போய்விட்டாலும்
வலிமையான உள்ளமிருந்தால்
உலகத்தையே கைப்பற்றலாம்
மன நிம்மதியின்
மாளிகை தனிமை
📖 பக்கம் 24 / 606
📋 Copied