வலியை அனுபவிக்கிறோம்
ஆனால் அதை
நம்மை அடிமையாக ஆக்க
அனுமதிக்கக்கூடாது
மௌனம் சில நேரம்
அழுகையை விட ஆழமானது
நம்மிடம்
பேசுகின்ற அனைவரும்
உண்மையாக
தான் பேசுகின்றார்களா
என்று யோசிக்க ஆரம்பித்தால்
வாழ்க்கை நிம்மதி
இல்லாமல் போய்விடும்
முயன்று கொண்டே இரு
தோல்வி உன்னிடம் மண்டியிடும் வரை
உண்மையாய் பழகும் நண்பனாய்
இரு இல்லாவிட்டால் நேருக்கு
நேர் மோதும் எதிரியாய் இரு
ஆனால் முதுகில் குத்தும்
துரோகியாய் மட்டும் இருக்காதே
வாழ்க்கை மலர் என்றால்
அதற்கு மணமாக இருப்பது
நம்முடைய நற்பண்புகள்
தோல்வியை சந்திக்காமல்
வெற்றி கிடைக்காது
முயற்சிக்காமல் வாழ்க்கை
வலுவாக மாறாது
முயற்சிக்கான
வயது, நேரம்
என்ற எல்லை இல்லை
முயற்சி இல்லாமல்
வெற்றி இல்லை
நம்பிக்கை இல்லாமல்
முயற்சி இல்லை
வாழ்க்கையைப் பற்றி யார்
சொல்லிக்கொடுத்தாலும்
அவ்வளவாக புரியாது
வாழ்க்கையே சொல்லிக்கொடுக்கும்
அப்போது தான் தெளிவாக புரியும்
📖 பக்கம் 227 / 606
📋 Copied