எப்பொழுதும் மனதை மகிழ்ச்சி பொங்க வைத்திருங்கள் சிறு கவலையும் பாதிக்காது பெரும் துன்பமும் கடந்து விடும்
வழிகாட்டியாய் யாரையும் நம்பி பயணித்தல் சிறப்பு வழித்துணையாய் யாரையுமே நம்பி பயணித்தல் சிறப்பல்ல
தடைகள் இருக்கும் இடத்தில்தான் சுடர் உண்டாகும்
பாதை எப்படி போகின்றது என பார்க்காதீர்கள் போகிறபாதை சரியானதா என பாருங்கள் போகும் இடத்தை அடைந்திடலாம்
அரசியலை போல் தான் வாழ்க்கையும் பல எதிர்பார்ப்புகளை கொடுத்து ஏமாற்றுவதில்
வாழ்க்கையை மாற்ற முடியாது ஆனால் அதில் நாம் எப்படிப் பதிலளிக்கிறோம் என்பதைத்தான் மாற்றலாம்
உழைப்பின் பாதை நீளமாக இருந்தாலும் அதன் பலன் எப்போதும் உயரமானதே
கோபப்பட வேண்டிய இடத்திலும் கதறி அழ வேண்டிய இடத்திலும் புன்னகையுடன் கடந்து செல்வது தான் பக்குவம்
முயற்சியில்லாமல் ஆசைப்படாதே கனவுகளுக்கு விலை உண்டு
எதையும் யாரிடமும் எதிர்பார்க்காமல் வெற்றி தோல்வி என்று மனம் சஞ்சலப்படாமல் நடப்பது அனைத்தும் நன்மைக்கே என்று மகிழ்ச்சியுடன் வாழ்வோம் வாழ்க்கை வாழ்வதற்கே