✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
உன்னால் உதிர்க்கப்பட்ட
வார்த்தைகளுக்கு
நீ உண்மையாக
இருக்க போராடினால்
எவ்வளவு
இக்கட்டான நிலையிலும்
அவ்வார்த்தைகளே
உன்னை காப்பாற்றும்
content_copy
முதல் முறை
யோசித்தால் தான்
அது யோசனை
பலமுறை அதையே
யோசித்தால்
அது குழப்பத்தில்
இருப்பதன் வெளிப்பாடே
content_copy
பேசாத பொழுதும்
பேசிக் கொண்டே
இருக்கிறது
பேசிய நினைவுகள்
content_copy
நடக்கும் பாதை
கடினமாக இருந்தாலும்
முன்னேறும் மனம் தான்
வாழ்க்கையின் உண்மையான செல்வம்
content_copy
நேற்று காயம் தந்தாலும்
இன்று அதை மறைக்க
சூரியன் உதயமாகிறான்
content_copy
வெறுப்பால் நிரம்பிய மனதில்
எந்த வெற்றியும் அமைதியை தராது
content_copy
தோல்வி ஓர் இழப்பு அல்ல
அது வழியைப் புரிந்துகொள்ள
ஒரு மொழிபெயர்ப்பு
content_copy
பொய் காரணம்
சொல்லிக் கூட
ஒருவரை
வெறுத்து விடுங்கள்
ஆனால்
பொய்யான அன்பு காட்டி
யாரையும் ஏமாற்றாதீர்கள்
content_copy
ஒருமுறை உதிர்ந்து
விட்டால் மறுமுறை
அதே அளவில்
பூப்பது இல்லை
நம்பிக்கை
content_copy
மறைக்க நினைக்கும்
மனிதர்களிடம் மறந்தும்
மயங்கிவிடாதீர்கள்
📖 பக்கம் 207 / 606
arrow_back
arrow_forward
📋 Copied