அழகு வாழ்க்கையில் இல்ல வாழ்க்கையை அழகாக காணும் பார்வையில்தான்
பிறக்கும் ஒவ்வொரு விடியலும் புது முயற்சியும் புத்துணர்ச்சியுமாகத் துவங்கட்டும்
சோர்வு வரலாம் ஆனால் திசை மாற வேண்டாம்
சாவு இல்லாத வீடும் சலனமே இல்லாத மனமும் இன்னும் உருவாக்கப்படவே இல்லை
நடப்பதை மாற்ற இயலாது என்பது நம்பிக்கை நடப்பதை சிந்தித்து சிறப்பாக செய்வது நம் திறமை
நீ ஒதுக்கப்படும் இடங்களில் நிமிர்ந்து நில் நீ புகழப்படும் இடங்களில் அடக்கமாய் நில் நீ விமர்சிக்கப்படும் இடங்களில் மௌனமாய் இரு நீ நேசிக்கப்படும் இடங்களில் அன்புடன் இரு
வெற்றியின் போது கை தட்டியவர்கள் தோல்வியிலும் கைக்கொடுத்தால் சோதனையில் இருந்து எளிதாக சாதனை படைக்கலாம்
நான் நானாகவே இருக்கிறேன் வளர்வதும் தேய்வதும் உங்களின் பார்வையை பொறுத்தது
தயங்குபவர்களுக்கும் பயப்படுபவர்களுக்கும் இந்த உலகில் எதுவும் சாத்தியமில்லை துணிவும் முயற்சியும்தான் தன்னம்பிக்கையின் உச்சக்கட்டம் வெற்றியின் முதற்படி