ஒரு நாள் எல்லாமே
நம் விருப்பப்படி இருக்கும்
ஆனால் அந்த நாளுக்காக
நாம் பொறுமையாக
இருக்க வேண்டும்
மதிப்பவர்களை
மனதில் நிறுத்து
உன்னை மிதிக்க
நினைப்பவர்களை
காலடியில் கிடத்து
கருவுக்குள் பூக்கும் ஒற்றை
துடிப்போடுதொடங்கும்
கர்வங்கள் தீர்க்கும் ஒற்றை
துடிப்போடுஅடங்கும்
நல்லவர்களை
காயப்படுத்தினால்
சரிக்கு சரியாக நின்று
சண்டையிட மாட்டார்கள்
ஆனால் அமைதியாக
அவர்களை விட்டு
வெகு தூரம்
விலகி சென்று விடுவார்கள்
வானிலையை விட அதிக
வேகமாக மாறுகிறது
மனிதனின் மனநிலை
நொடிகள் சேர்ந்து தான்
நாட்கள் ஆகின்றன
அதுபோல் சிறு முயற்சிகள்
சேர்ந்து தான் வாழ்க்கை உருவாகிறது
முன் செல்லும் காற்றை
எதிர்த்து நடந்தால் தான்
நிலையான அடித்தளம் கிடைக்கும்
தொலைத்த பழைய
பொக்கிஷங்கள் ஒன்று
கூட திரும்பிக்
கிடைக்கப் போவதில்லை
வாழ்வின் உண்மையான செல்வம்
தினசரி அனுபவங்களில் மறைந்திருக்கும்
நமக்கு ஒருவரிடம்
இருந்து மதிப்பு
இல்லை என்று தெரிந்தால்
அவர்களிடம் இருந்து
விலகிவிடுங்கள்
ஒரு நாள் உங்களின்
வருகைக்காக அவர்கள்
காத்திருக்கும் நேரம் வரும்
📖 பக்கம் 190 / 606
📋 Copied