✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
சில சமயம்
வெற்றி பெறுவது
கூட எளிது தான்
ஆனால் அதை
தக்க வைப்பது தான்
மிகக் கடினம்
content_copy
நினைக்க தோன்றும்
கடந்த காலத்தின்
சில நினைவுகள் தான்
நம் வாழ்வின் வசந்த காலம்
content_copy
நம்பிக்கையா இருங்க
ஆனால் ஒருவருக்கு தெரியாமல்
இன்னொருவருக்கு நம்பிக்கையா இருக்காதிங்க
content_copy
பிரிந்து செல்லும்
ஒவ்வொரு உறவுகளும்
ஏதோ ஒரு வகையில்
எதையாகினும்
கற்று கொடுத்து
செல்கின்றனர்
content_copy
காலம் எதையும் கற்றுத் தரும்
ஆனால் காத்திருக்க
தெரிந்தவர்களுக்கு மட்டும்
content_copy
ஆறுதல் ஏதுமின்றி
அழுது முடித்த பின்பு
வரும் நம்பிக்கைக்கு
பலம் சற்று அதிகம் தான்
content_copy
நாளை எனும் வார்த்தை
இருப்பது காரணமாகவே
இன்றே ஆரம்பிக்க
வேண்டியது முக்கியம்
content_copy
பிரச்சனைகள் முடிவல்ல
புதிய தொடக்கங்களுக்கான
சோதனைகள்
content_copy
இலக்குகள்
கடினமாகும் போது
முயற்சியும் பயிற்சியும்
அதிகமாகவே
தேவைப்படுகிறது
தன்னம்பிக்கை
கொண்டு செயல்படு
வெற்றி மாலை
உன்னை தேடி வரும்
தருணம் இது
content_copy
மாறாதது சிலரின்
நினைவுகள் மட்டுமே
வாழ்க்கை கூட மாறிடும்
📖 பக்கம் 188 / 606
arrow_back
arrow_forward
📋 Copied