யாரும் யாருக்காகவும் இல்லை
சுழலும் உலகம்
ஓர் சுற்றுலாத்தளமே
இச்சுற்றுப் பயணத்தில்
யாவருமே சுற்றுலாப் பயணிகளே
எதிர்பாராத சவால்கள்
நம் திறமையை
வெளிப்படுத்த உதவியிருக்கின்றன
தோல்வியை சந்திக்காமல்
வெற்றி கிடைக்காது
முயற்சிக்காமல் வாழ்க்கை
வலுவாக மாறாது
சில நேரங்களில்
நீங்கள் இருண்ட இடத்தில்
இருக்கும்போது
நீங்கள் புதைக்கப்பட்டதாக
நினைக்கிறீர்கள்
ஆனால் உண்மையில்
நீங்கள் விதைக்கப்படுகிறீர்கள்
அவமானம் படும்போது
அவதாரம் எடு
வீழ்கின்ற போது
விஸ்வரூபம் எடு
வாதாடுவதை விட்டு
விட்டு வாழ்ந்துக் காட்டு
எதிரியை ஜெயிக்கணும்னு
முடிவு செய்துவிட்டால்
நீ ஏந்த வேண்டிய
ஒற்றை ஆயுதம்
புன்னகை மட்டுமே
எவ்வளவு
தொல்லைகள் கொடுத்தாலும்
எப்போதும் சந்தோஷமாய்
இருக்கிறானே என்கிற
நினைவே அவனை
கொன்றுவிடும்
(மகிழ்ந்திரு)
நம்மை உடைத்த நாள்களே
நம்மை உருவாக்கிய நாள்கள்
இறுதி முடிவை
யாரும் கணிக்க முடியாது
ஆனால் வெற்றி பெற
முயற்சி செய்யலாம்
தடைகள் வரும் போது
அஞ்சினால் இலக்கு தூரமாகும்
முடிவை நினைத்து பயப்படாதே
தொடங்காத பயணமே
உண்மையான தோல்வி
📖 பக்கம் 111 / 606
📋 Copied