நீ உச்சரித்த
பின் தான் தெரிந்தது
என் பெயர்
இத்தனை அழகு என்பதே
நீ உச்சரித்த
பின் தான் தெரிந்தது
என் பெயர்
இத்தனை அழகு என்பதே
காதல் ஓர் பயணம் இல்லை
அது ஓர் இமையாத கனவு
நினைவில் தங்கிய ஓர் நிமிடம்
ஆயுள் முழுக்க காதலை வாழ வைக்கும்
ஒவ்வொரு முத்தமும்
ஒரு கவிதை
அதன் அர்த்தம் மட்டும்
இருவருக்கும் மட்டுமே புரியும்
புயல் பார்வையில்
சாய்ப்பதும் ஏனடா
உன் தென்றல்
பார்வையே போதுமே
நான் வீழ்ந்திட
ஆரம்ப புள்ளியும்
நீ முற்று புள்ளியும்
நீ என் வாழ்வில்
அழியா
வண்ண கோலமாய்
மௌனத்தில் கூட
இதயம் பேசும்
மொழி காதல்தான்
மௌனத்தின் நடுவே கூட
பாசம் பேசும் மொழியாக
மனதிற்குள் ஓடி வந்து நிற்கிறது
பேச நினைத்த வார்த்தைகளும்
தூரமானது உன்னருகில்
தனிமையில் பிறக்கும்
மெளனப் பேச்சுகள்
இரு உள்ளங்களின்
ரொமான்ஸ் மொழி