மௌனம் காதல் பேசும்
மொழி என்றால்
சுவாசம் அதன் இசை
மௌனம் காதல் பேசும்
மொழி என்றால்
சுவாசம் அதன் இசை
உறக்கத்தை துரத்தி
கனவுகளை
கோர்த்து கண்களும்
காத்திருக்கு
நீ வருவாயென
தொட்டுச் சென்ற கைகளும்
தொலைவிலே விட்டுவிட்ட
நினைவுகளும்
காதல் அதைத்தான் சொல்கிறது
கண்களில்
காதலை கலந்து
பார்வையால்
ஏற்றிய ஜோதி
அணையாது
ஆடிக்காற்றிலும்
நீ அணைக்காமல்
இந்த உலகத்தில்
உன்னை போல்
ஒருவரும் இல்லை
என்பதை விட
என் உள்ளத்தில்
உன்னை தவிர
ஒருவரும் இல்லை
என்பதே சரி
விடைப்பெறட்டும்
நாணம்
விடைத்தருகிறேன்
நானும்
உன் பார்வையின்
கேள்விக்கு
கனவின் மிச்சத்தை
உயிர்ப்பிக்காமல்
உணர்விண்றியே
உதயமாகிக் கொண்டுதானிருக்கிறது
ஒவ்வொரு விடியலும்
நம்பிக்கையும் முயற்சியும்
தடை இல்லாத
பாதையை உருவாக்கும்
இன்று ஜெயிப்பது வெற்றி
அல்ல ஆயுள்வரை தோற்காமல்
இருப்பதுதான் உண்மையான வெற்றி
காதலர் தின வாழ்த்து என் காதலே
பார்த்த முகங்கள் கண்ணை
விட்டு பிரிந்தாலும் பழகிய
இதயம் தெஞ்சை விட்டு
பிரிவதில்லை