மையும் சொல்லும்
உன் மீதுள்ள
மையல்களை
கவிதையாய் கரைந்து
விழிகள் எழுத
மையும் சொல்லும்
உன் மீதுள்ள
மையல்களை
கவிதையாய் கரைந்து
விழிகள் எழுத
காயத்தின் வலிகூட
சுகமான காதலாகும்
காயப்படுத்துவது
நீயென்றால்
நிஜமென்றால்
கடந்துவிடும்
கனவென்றால்
கலைந்துவிடும்
நினைவில் மட்டுமே
மிதக்கும்
நீங்காத உன் நினைவு
நிம்மதியாய்
காத்துக் கிடத்தலின்
சுகம் அறிகிறேன்
என் காதலே
நீ என்னை தழுவும்
நொடிகளுக்காக
மனதை பதற வைக்கும் ரசனை
உணர்வுகளை ரணமாக்கும்
ஆசை காதலின் இருண்ட அழகு
சின்ன சிரிப்பின் சுடரில் கூட
மனதின் இருள் கரைந்து
பாசம் ஒளியாகிறது
விழிகளில் எதுவும் பேசாதபோதும்
மனத்தில் மழையாக சிந்துவதே காதல்
எத்தனை பேர் வந்தாலும்
ஒருவரின் அன்பு மட்டும்
வாழ்நாளில் அழியாத
இடம் பிடிக்கிறது
தொடுவதற்குள் தேடும்
அந்த துடிப்பு தான்
ஆசையின் உண்மை பரிமாணம்
மூச்சின் நிறைவை விட
காதலின் நெருக்கம் தான்
உயிரோட்டமாக இருக்கும்