கண்ணோட்டத்தில் பேசாமல்
ஓர் உறவு உருவானது
அதுவே காதல்

விரல்களில் நடந்த காதல்
உதடுகளில் உருகி சிரிப்பாயிற்று

விரல்கள் தொடாத இடத்திலும்
விருப்பத்தின் அலைகள்
இரத்தத்தை வெப்பமாக
அலைக்கழிக்கின்றன

உன் மனதில்
யாரும் நுழையட்டும்
ஆனால் நீ
ஒதுக்கும் இடம்
எனக்கானதாக மட்டுமே
இருக்க வேண்டும்...

மனதையும்
கலைத்து விட்டு
சென்று விட்டாய்
எண்ணிக் கொண்டிருக்கிறேன்
நிமிடங்களை
மீண்டும்
உன் விளையாட்டுக்கு
காதலுடன்

உன் அதிகாரமும்
பிடிக்கும்
அது அன்பு
கலந்த
அணைப்பென்றால்

தூரமது மாயமாய் மறைந்து
உன் விழிகளின் நர்த்தனமதில்
உறைந்து நான் போகும்
நொடிகள் நோக்கி நகர்கிறது
என் கடிகார முட்கள்

தவிக்கும் இரு
நெஞ்சம் தடுமாறுகிறது
என் நெஞ்சம் என்
காலடி கெஞ்சும்
உன் வருகைக்காக

உதடுகள் சேர்ந்த தருணம்
ஆசையின் இரகசிய உலகை
திறந்து விடுகிறது

அருகாமை தரும் சுவாசம்
ஆயிரம் இசையை விட இனிமை